சாளரமோர பயணம்....சற்றே சிரமம்....

மாநகரின் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து மலைக்கோட்டை  செல்லத் தயாராய் இருந்தது  அந்த
தனியார் பேருந்து.

சாலையோர வேடிக்கை  விடயங்களை ரசித்துப் பழகிட்டபடியால் சாளரமோர இருக்கையொன்றை சற்றே சிரமத்துடன்  சிறைப்பிடித்துவிட்டேன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயணிகளின் கூட்டம் சற்றுக் குறைவாகவே இருந்தது.
பயணிகளின் பல்வேறு நடப்பு நிகழ்வுகளின் அலசல், "சத்திரம் போகிறவங்க, ஐந்து ரூபாய் சில்லரை வச்சுக்கோங்க" என்ற நடத்துனரின்
நடத்துனரின் கண்டிப்பு ,பேருந்தின் பாடல் ஒலி என சப்தங்கள் சங்கமிக்க 
பாலக்கரைப் பாலத்தைக்கடந்து
மயிலம் சந்தை வந்தடைந்தது பேருந்து.

வேடிக்கைப் பார்க்கும் விடயத்தில் மூழ்கிய எனக்கு கண்ணில் தூசி விழுந்ததும்தான் நினைவு தெரிந்தது.
கலங்கிய கண்களை
கைக்குட்டை கொண்டு துடைத்துக் கொண்டிருக்கையில்  "ஐயா இரவெல்லாம் மூட்டை தூக்கியதால் உடலும் கண்களும் சோர்வாயிருக்கிறது
சற்று எழுந்துகொண்டு இடம் கொடுத்தால்  அமர்ந்துகொள்வேன்" என்றார் ஒரு பெரியவர்.

பதிலுக்கு "நான் மட்டும் என்ன படுத்து தூங்கிட்டா வாரேன்? நானும் வேலைபார்த்த கலைப்பில் தான் உட்கார்ந்துட்டு வாரேன்" என்றார் என்னருகில் அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயதுக்காரர்.

எனது இருக்கையில் அப்பெரியவரை
அமரச்சொல்லிவிட்டு,
பேருந்தின் மேற்கூரை கம்பியைப் பற்றிக்கொண்டு தூசி விழுந்த கண் சற்று மங்கலாய் தெரிந்ததால் கண்களுக்குப் பயிற்சியளிக்கும் பொருட்டு இரு கண்களையும்  பலமுறை  படபடவென சிமிட்டிக்கொண்டும் ஒரு கண்ணை மூடியும் ஒரு கண்ணைத் திறந்தும் என சமவாய்ப்பு முறையில் செய்துகொண்டிருந்தேன்.

திடீரென எனக்கெதிரே உட்கார்ந்திருந்த
சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க
சிறுமி தனது தாயிடம்,
அம்மா..."
அந்த அங்கிள் என்னப்பாத்து
கண்ணடிக்கிறார்மா..." என்று சப்தமிடவும்  பேருந்திலிருந்த
பயணிகள்  அனைவரின் பார்வையும் என்மேல்.
நான் சற்று திகைத்துப் போனேன். நல்லவேலை அவள் மூன்று வயது சிறுமியானதால் நான் பிழைத்தேன் ஒருவேளை பதிமூன்று வயது மங்கையாயிருந்திருந்தால்
என் நிலைமை என்னவாகியிருக்கும்??

என்னதான் நான்,
எனது நிலமையை விளக்கியிருந்தாலும் பயணிகள் கூட்டம் அதை நம்பியிருக்குமா? அல்ல
ஏற்றிருக்குமா என்ற ஐயத்தோடே அன்றய பயணம் இனிதே(?) நிறைவு பெற்றது.

Share:

Visited

FIND ME ON TWITTER

POSTS FROM FACEBOOK

Recent Posts