பயணம் புதிது..

பயணம் புதிது. .
  • பாராசூட் மூலம் முதன்முதலில் குதித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் கேப்டன் பெர்ரி. 1912 ஆம் ஆண்டு இவர் மத்திய அமெரிக்காவிலுள்ள மிஸ்சோரியிலிருக்கும் செயிண்ட் லூயிஸ் என்ற இடத்தில் விமானத்தில் பறந்தபோது வானிலிருந்து குதித்தார்.

  • இதே போல் பாராசூட் மூலம் முதன்முதலில் குதித்த பெண் என்ற பெருமையைப் பெற்றவர் ஜார்ஜியா பிராட்விக் என்பவர் ஆவார். இவர் 1913 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 21ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானத்திலிருந்து பாராசூட் மூலம்  குதித்தார். 
  • ராக்கெட்மூலம் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு லைக்கா என்ற பெண் நாய்.1957 அம் ஆண்டு அப்போதய சோவியத் யூனியன் அனுப்பிய ராக்கெட் மூலம் லைக்கா விண்வெளிக்குச் சென்றது.
  • அதன் பிறகு 1958 ஆம் ஆண்டு லாஸ்கா மற்றும் பென் ஜீ என்ற இரு எலிகளை அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்பியது.
  • 1961 ஆம் ஆண்டு அமெரிக்கா ஹாம் என்ற சிம்பன்சி  குரங்கை விண்வெளிக்கு அனுப்பியது.
  • 1963 ஆம் ஆண்டு ஃப்ரான்ஸ் பெலிட்டி என்ற பூனையை விண்வெளிக்கு அனுப்பியது.
படம்:img.nauticexpo.com.



Share:

மாலைமாற்று சொற்கள்

மாலைமாற்று சொற்கள்



இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் படித்தாலும் எழுதினாலும் ஒரே போல இருக்கும் சொற்கள் மாலைமாற்று அல்லது இருவழியொக்கும் சொற்கள்
 (Palindromes ) எனப்படும். 
சுருங்கக்கூறின்,
எழுத்துக்களை ஈறுமுதலாகப் படித்தாலும் பாட்டு மாறாத கவிவகை; இருவழியொக்கும் சொல்  மாலைமாற்று ஆகும்.
தமிழ் இலக்கியத்தில் ஓவியக் கவி (சித்திரக்கவி) மிறைக் கவி ஆகிய பிரிவுகளுள் மாலைமாற்றுஅடங்கும்.   
மாலைமாற்று மாலையின் நுனியை மாற்றிப் பிடிப்பதுபோல அமைந்திருக்கும். அதாவது, ஒரு பாடலின் முதல் வரியைத் தொடக்கத்திலிருந்து இறுதிவரை படித்துக்கொண்டே வந்து, பின்பு அதையே இறுதியிலிருந்து தொடக்கம் வரை மாற்றிப் படித்துவந்தால், அந்த அமைப்பு இரண்டாவது வரியில் இருப்பதைக் காணலாம். இதுவும் சித்திரக்கவி வகையைச் சேர்ந்தது. இவ்வாறு ஒரு மாலையின் நுனியும் இறுதியும் மாறி மாறி அமைந்திருப்பதால், இது "மாலைமாற்றுப் பதிகம்' எனப் பெயர் பெற்றது.
                                                                                                              ( நன்றி: தமிழ் விக்சனரி)
மாலைமாற்று என்பதற்கான ஆங்கிலச் சொல்லான Palindrome என்பது கிரேக்க வேர்ச் சொற்களிலிருந்து பெறப்பட்டு ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது.
மாலைமாற்று நிறைய மொழிகளில் இருக்கிறது. தமிழ்மொழியில், தமிழ் 
இலக்கியத்தில் மாலைமாற்று வடிவில் பதிகமே
 இருக்கிறது. திருஞானசம்பந்தர் பாடிய திருமாலைமாற்றுப் பதிகத்தில் காப்புச்
 செய்யுளும் சேர்த்து மொத்தம் 11 மாலைமாற்றுச் செய்யுள்கள் இருக்கின்றன. 

தமிழில் உள்ள சில மாலைமாற்று  சொற்கள் மற்றும் வாக்கியங்கள்
சிலவற்றை இங்கு பட்டியலிட்டுள்ளேன்.
  1. விகடகவி
  2. குடகு
  3. திகதி
  4. தேடாதே
  5. கைரேகை
  6.  விரவி  
  7. மாமா
  8. தாத்தா 
  9. பாப்பா
  10. தேரு வருதே
  11. மாடு சாடுமா
  12. மோரு தாருமோ
  13. மோரு வருமோ
  14. தோடு ஆடுதோ
  15.  மாலா போலாமா? 
  16. மோக ராகமோ? 
  17. மேளதாளமே 
  18. மாடு ஓடுமா? 
  19. போடா போ 
  20. வாசு வா?
  21. விதேச தேவி 
  22. வை பூவை
  23. கைதி வேதிகை
  24. யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
    காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா                            (திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களுள் ஒன்று)
  25. நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
    காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
Share:

ஜனவரி 26 சிறப்புகள்

ஜனவரி 26 சிறப்புகள்

னவரி 26 என்பது  இன்று நாம் உலகளவில் பயன்படுத்தும் நாட்காட்டியான கிரிகோரியன் ஆண்டின் 26ஆம் நாள் ஆகும்.
இத்தகைய ஜனவரி26 ஆம் நாளில் நம் நாட்டில் நிகழ்ந்த சில சிறப்புகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.




  • 1844 - குஜராத் மாநிலம் போர்பந்தரில் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்டது.
  • 1862 - இந்தியாவில் முதன்முதலில் தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
  • 1866 - சூயஸ் கால்வாயில் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
  • 1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கம்.
  • 1888 - இந்தியாவில் தொலைபேசிமுறை துவக்கம்.
  • 1897 - சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில்  கலந்துகொண்டபின் சுவாமி விவேகானந்தர் அவர்கள் இந்தியா திரும்பினார்.
  • 1950 - இந்தியா குடியரசானது.
  • 1973 - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தொலைக்காட்சிநிலையம் அமைக்கப்பட்டது.

Share:

பறவைகள் பலவிதம்..

பறவைகள் பலவிதம்..


1.பையா எனும் பறவை மனிதனைப்போல் விசிலடிக்கும் திறனுடையது.

2.பெங்குவின் நீருக்கடியில் நீந்தும் திறனுடையது.

3. கிவி எனும் பறவைக்கு வயிற்றில் பல் உள்ளது.

4.நெருப்புக்கோழியானது கற்களைத்தின்னும் திறனுடையது.

5.வாத்து ஒருகண்பார்வை திறனுடையது.

6.ஆந்தையானது தனது கழுத்தை வட்டமாக சுழற்றும் தன்மையுடையது.

7.பிட்டா எனும் பறவை ஒன்பது வண்ணங்களையுடையது.

8.ஆண்டியன் காண்டர் எனும் பறவையாது 
சிறகையடிக்காமல் வெகுதூரம் பறக்கும் திறனுடையது.

9.பால்கன் எனும் பறவை வெகுதூரத்தில் பறக்கும் திறனுடையது.

10. ரோட் ரன்னர் எனும் பறவையாது பெயருக்கேற்ப சாலைகளில் ஓடும் திறமையுடையது.

11.சாண்ட் கிரவுஸ் எனும் பறவையாது தனது வயிற்றில் நீரை உறுஞ்சும் இறக்கையை கொண்டுள்ளது.

12.ஹம்மிங் எனும் பறவை பின்னோக்கி பறக்கும் திறனுடையது.

13.ஸ்பின் டைல்ட் ஸ்விப்ட் எனும் பறவை அதிவேகத்தில் பறக்கும் பறவையாகும்.

14.பாரடைஸ் எனும் சொர்க்கப்பறவை மிக அழகான இறக்கைகளை கொண்டுள்ளது.

15.லெம்மாஸீர் வல்சர் எனும் பறவை எலும்பை உடைக்கும் வல்லமையுடையது.

16.புறா ஓய்வெடுக்காமலே சுமார் 1000 கி.மீ. வரை பறக்கும் திறனுடையது.
Share:

புளுடூத் - திறக்கற்றை

புளுடூத் - திறக்கற்றை

இன்று நாம் பயன்படுத்தும்  புளுடூத் (திறக்கற்றை)  எனும் தொழில்நுட்பமானது தரவுகளை (தகவல்கள்) பிற சாதனங்களுக்கிடையில் பகிர்ந்துகொள்ள உதவும்ஒரு தகவல் தொழில்நுட்பமாகும்.  இதில்
2.4 கிகா ஹெர்ட்ஸ்  ரேடியோவைப்பயன்படுத்தி 720 கிலோ பைட் வேகத்தில் சாதனங்களை  ரிமோட் மூலம் இயக்கும் ஒரு தொழில்நுட்பமாகும்.
ஒவ்வொரு சாதனங்களுக்கும் ஒரு தொழில்நுட்பமுகவரி கொடுக்கப்படும். அவற்றை இயக்குவதற்கான இரகசிய குறீகளின் உதவியால் இயக்கப்படவேண்டிய சாதனங்கள் எளிதில் இயக்கப்படும். இந்த தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டுபிடித்தது ஐரோப்பாவைச் சேர்ந்த எரிக்ஸன் எனும் நிறுவனமாகும்.

புளுடூத் எனும் பெயர் எப்படி வந்ததுதெரியுமா?

புளூடூத்  எனும் சொல்  செருமானிய மொழிச்சொல்லான "ப்ளாடோன்" (Blátönn) எனும் சொல்லிலிருந்து  உருவான ஆங்கில வடிவம். இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த டென்மார்க்கின் முதலாம் ஹரால்ட் மன்னன்
" சிங்க் ஹெசால்ட் ப்ளாடண்ட் " என்பவரின் சிறப்புப் பெயராகும். அதீத விருப்பத்தின்காரமாக அதிகஅளவிலான 
 புளூபெரீசு பழங்களை உண்ட  இம்மன்னனின் பற்களில் நீலக்கறை படிந்து நீலநிறமாக தோற்றமளித்தது. இதனால்  மக்கள்  இம்மன்னனை "புளு டூத்" என்று அழைக்கத் தொடங்கினர். இவர் வேறுபட்ட டானிஷ் பழங்குடியினரை ஒன்றிணைத்து, அங்கிருந்த பல குறுநிலங்களை எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து ஒரே பேரரசாகக் கட்டமைத்தாராம். 
புளூடூத் தொழில்நுட்பமும் அவரைப் போலவே தகவல்தொடர்புகளை  ஒரே தரநிலைக்குக் கொண்டு வரும் செயலைச் செய்கிறது. இதற்காகத்தான்  இப்பெயர் இந்த தொழில்நுட்பத்திற்கும் புளுடூத் எனும்  பெயர் வழங்கப்பட்டது.

புளுடூத் சின்னம் (லோகோ) எப்படி வந்ததுதெரியுமா?




ஜெர்மானிய எழுத்துகளான  (ஹகால்) (Hagall) மற்றும் (பெர்க்கனான்) (Berkanan) ஆகியவை இணைந்த  இணைப்பெழுத்துக்களின் சேர்க்கையே புளுடூத் சின்னம் ஆகும். இந்த குறீடுகளின் விளக்கம் படமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Share:

இருபத்து ஆறு முதல் ஐம்பது வரை

இருபத்து ஆறு முதல்  ஐம்பது வரை



  • நமது பாதங்களில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை 26.
  • ஸ்பானிஷ் மொழியில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 27.
  • அரபி மொழியி உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 28.
  •  அஜந்தாவில் உள்ள குகைகளின் எண்ணிக்கை 29.
  • உலகில் தரைப்பாகத்தின் விழுக்காடு 30.
  • பாரசீக மொழியிலுள்ள ழுத்துக்களின் எண்ணிக்கை 31.
  • நமது பற்களின் எண்ணிக்கை 32.
  • ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
  • எல்லோராவில் உள்ள குகைகளின் எண்ணிக்கை 34.
  • தமிழில் உள்ள அணி வகைகள் 35.
  • பெண் குழந்தையின் பற்களின் எண்ணிக்கை 36.
  • சந்யாசி இராக எண் 37.
  • முதல் உலகப்போரில் கலந்துகொண்ட நாடுகளின் எண்ணிக்கை 38.
  • இயேசுவை சிலுவையில் அறையும்முன் அவரை 39 முறை சவுக்கால் அடித்தனராம்.
  • ஆண்குழந்தையின் பற்கள் 40.
  • காண்டா மிருகத்தின் சராசரி வயது 41.
  • நாயின் பற்களின் எண்ணிக்கை 42.
  • மனித உடலில் உள்ள சராசரி நீரின் அளவு 43 லிட்டர்.
  • இமயமலையின் வேர் தரைக்குக்கீழ்  44 மைல் ஆழத்தில் உள்ளது.
  • சென்னையிலுள்ள புதிய கலங்கரைவிளக்கத்தின் உயரம் 45 மீட்டர்.
  • தமிழில் ஒரு சொல்லுக்கு சுமார் 46 பொருள் உடைய சொற்கள் உள்ளன.
  • ஒரு மண்டலம் என்பது 48 நாட்களைக்கொண்டது.
  • சீனர்களின் மரண துக்க காலம் 49 நாட்கள்.
  • ஒரு கழுதை சுமார் 50 கிலோ எடையுள்ள சுமையை சுமக்கும்.

Share:

சர்வதேச தினங்கள் - தொகுப்பு

சர்வதேச தினங்கள்



ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO)
உலகில் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் சில நாட்களை சிறப்பு தினங்களாக அறிவித்துள்ளது. 
அத்தகைய சிறப்புவாய்ந்த தினங்களை
பலமூலங்களில் இருந்து சேகரித்து  இங்கு மாதவாரியாக  பட்டியலிட்டுள்ளேன்...


ஜனவரி

  • 26 - உலக சுங்கத்துறை தினம்
  • 30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி

  • 02 - உலக சதுப்பு நில தினம்
  • 21 - உலக தாய்மொழிகள் தினம்
மார்ச்

  • 06 - உலக புத்தகங்கள் தினம்
  • 08 - உலக பெண்கள்கள் தினம்
  • 13 - உலக சிறுநீரகநோய் விழிப்புணர்வு தினம்
  • 15 - உலக நுகர்வோர் தினம்
  • 21 - உலக வன தினம்
  • 21- உலக   கவிதைகள் தினம் 
  • 22 - உலக தண்ணீர்  தினம்
  • 23 - உலக   தட்பவெட்பநிலை தினம்
  • 24 - உலக   காசநோய் தினம் 
ஏப்ரல்

  • 02 - உலக   சிறுவர்நூல் தினம்
  • 07 - உலக   சுகாதார  தினம்
  • 15 - உலக   நூலகர்கள்  தினம்
  • 18 - உலக நினைவுச்சின்னங்கள் தினம்
  • 22 - உலக புவி தினம்
  • 23 - உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் 
மே

  • 01 - உலகத் தொழிலாளர் தினம்
  • 03 - உலக சூரிய தினம்
  • 03 - உலக ஊடக விடுதலை தினம்
  • 04 -  உலக தீயணைக்கும் படையினர் தினம்
  • 08 - உலக செஞ்சிலுவை நாள்
  • 12 - உலக செவிலியர் நாள்
  • 15 -  உலக குடும்ப தினம்
  • 18 -  உலக அருங்காட்சிய தினம்
  • 31 - உலக  புகையிலை எதிர்ப்பு தினம்
ஜீன்

  • 05 - உலக சுற்றுச்சூழல் தினம்
  • 08 - உலகக் கடல் தினம்
  • 12 - உலக குழந்தை தொழிலார் ஒழிப்பு தினம் 
  • 14 - உலக இரத்த தான தினம்
  • 14 - உலக வலைப்பதிவர்கள் தினம்
  • 20 - உலக அகதிகள் தினம்
  • 27 - உலக நீரிழிவுநோய் எதிர்ப்பு தினம்
ஜீலை

  • 11 - உலக மக்கள்தொகை தினம்
  • 20 - சதுங்க தினம்

ஆகஸ்ட்

  • 01- உலக சாரணர் தினம்
  • 12 - உலக இளைஞர் தினம்

செப்டம்பர்

  • 08 - உலக எழுத்தறிவு தினம்
  • 15 - உலக மக்களாட்சி தினம்
  • 21 - உலக அமைதி நாள்
  • 27 - உலக சுற்றுலா தினம்

அக்டோபர்

  • 01 - சர்வதேச முதியோர் தினம்
  • 02 - உலக அகிம்சை தினம் 
  • 04 - உலக வனவிலங்குகள் தினம்
  • 05 - உலக ஆசிரியர்கள் தினம்
  • 09 - உலக தபால்கள் தினம்
  • 10 - உலக மனநல தினம்
  • 16 - உலக உணவு தினம்
  • 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
  • 24 - ஐ.நா தினம்

நவம்பர்

  • 17 - உலக மாணவர்கள் தினம்
  • 20 - உலக குழந்தைகள் தினம்
  • 21 - உலக தொலைக்காட்சி தினம்

டிசம்பர்

  • 01 - உலக எயிட்ஸ் தினம்
  • 02 - உலக அடிமை ஒழிப்பு தினம்
  • 03 - உலக ஊனமுற்றோர் தினம்
  • 09 - உலக ஊழல் ஒழிப்பு தினம்
  • 10 - உலக மனித உரிமைகள் தினம்.
Share:

Visited

FIND ME ON TWITTER

POSTS FROM FACEBOOK

Recent Posts