சிறப்பு வகுப்புனு
சீக்கிரமே
வந்துடுவோம்
முன்னாடி வரிசையில
மூனாவதா
நீ இருப்ப
கடைசி வரிசையில
கையக்கட்டி
நானிருப்பேன்
வாயாடிப்பயலேனு
வாத்தியாரு
திட்டயில
விழியெல்லாம் விரிஞ்சிருக்க
பெருஞ்சிரிப்பு
நீ சிரிப்ப
உணவு வேளையில
உன்னோடு
நானிருக்க
வயிறுமட்டுமின்றி
மனசும்
நெறஞ்சிருக்கும்.
#தோழி