பாஸ்போர்ட் எடுக்க உதவும் வழிமுறை!



பாஸ்போர்ட் எடுக்க உதவும் வழிமுறை!
ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது.
பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா”http://passportindia.gov.in/AppOnlineProject/welcomeLinkஎன்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.
1) பாஸ்போர்ட் எத்தனை வகைப்படும்?
• ஆர்டினரி (Ordinary)
• அப்பிசியல் (Official)
• டிப்ளோமேட்டிக் (Diplomatic)
• ஜம்போ (Jumbo)
என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும்,Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன?
இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல்(Tatkal).
3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்
. மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம்
. ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.
4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்?
முக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.
1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)
• ரேசன் கார்டு
• பான் கார்டு
• வாக்காளர் அடையாள அட்டை
• வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
• தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)
• விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு - இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்
• பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதழ்கள்
• 10வது மேல் படித்திருந்தால்தான் ECNR முத்திரை இருக்கும், எனவே கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டு போகவும்.
• உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
• பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
• மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
• பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண்ணப்பிக்கலாம்.26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.
சிறுவர்-சிறுமியர்
சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.
5) இணையதளம் மூலம் விண்ணப்பிபதால் என்ன பயன்கள்?
• விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்
• நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை
6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கான கட்டணம்?
• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)
• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)
• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expireஆகவில்லை எனில்)
• 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்
• தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும். மேலும் தெரிந்து கொள்ள http://www.lopol.org/…/indian-passport-fee-structure-fresh-…
7) தொலைந்து போனால்?
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.
தட்கல் திட்டம்:
பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தட்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.
தட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்
அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
கீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
• வாக்காளர் அடையாள அட்டை
• இரயில்வே அடையாள அட்டைகள்
• வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்
• வங்கி அலுவலக புத்தகம்
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது
• ஓட்டுனர் உரிமம்
• பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)
• தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்
• சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்
• அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்
• ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை
• மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்.
மேலும் விவரங்களுக்கு :http://passport.gov.in/
விசா பெற வழிகாட்டும் இணையத்தளங்கள்!........
வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.
குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com/) வலைத்தளம் அமைந்துள்ளது.
எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.
இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.
ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.
உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?
அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net/) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
Source: http://jannalmedia.com/dpages.php?id=3627
Share:

வாகன ஓட்டுநர் உரிமம் அடிப்படைத் தகவல்கள்!



வாகன ஓட்டுநர் உரிமம் அடிப்படைத் தகவல்கள்!

1.ஒருவருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் ஏன் தேவை?
ஒருவர் முறையாக பயிற்சி எடுத்து, அவர் நன்றாக வாகனம் ஓட்டுவார் என்பதற்கான அத்தாட்சி அது. மேலும், அவருக்கு போக்குவரத்து, சாலை விதிமுறைகள் தெரியும் என்பதற்கான அத்தாட்சியும் அதுவே. தவிர, ஓர் ஓட்டுநர் வாகனம் ஓட்டும் விஷயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அதுவும் அந்த ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்படும். எனவே, வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம் தேவை.
2.ஒருவர் எத்தனை ஆண்டுகள்வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவார்?
அது உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தது. ஒருவரது வயது, உடல் நிலையைப் பொருத்து அவருக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படும். அதற்கான அத்தாட்சியும் ஓட்டுநர் உரிமம்தான்.
3.வாகன ஓட்டுநர் உரிமம் பெற வயது வரம்பு என்ன?
வாகன ஓட்டுநர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். 50 சி.சி.க்கு குறைந்த, கியர் இல்லாத வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். 50 சி.சி.க்கு அதிகமான மற்றும் நான்கு சக்கர வாகன (எல்.எம்.வி - இலகு ரக வாகனம்) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.
4.இலகு ரக வாகனங்கள் என்றால் என்ன?
இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்டவை இலகு ரக வாகனங்கள். அவற்றை பொதுப் போக்குவரத்து வாகனமாக பயன் படுத்த பேட்ச் (அடையாள அட்டை) பெறவேண்டும். அதற்கு 20 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
5.கனரக வாகனம் (ஹெச்எம்வி-ஹெவி மோட்டார் வெஹிக்கிள்) ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?
பேருந்து, லாரி போன்றவை கனரக வாகனங்கள். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியடைந்த பின்பே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும். இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
6.வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி உண்டா?
போக்குவரத்து வாகனங்கள் இயக்குவதற்கான கல்வித் தகுதி 8-ம் வகுப்பு. சொந்த பயன்பாட்டுக்காக வாகனம் ஓட்டுபவர், வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவை இல்லை.
7.ஓட்டுநர் உரிமம் பெறும் முறை என்ன?
ஓட்டுநர் உரிமம் பெற ஒருவர் கொண்டுவரும் வாகனத்துக்கு ஆர்.சி. (பதிவுச் சான்று), வாகனக் காப்பீடு, மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் போன்றவை நடப்பில் இருக்க வேண்டும். பின்பு, ஆய்வாளர் முன்னிலையில் வாகனத்தை ஓட்டிக் காட்டவேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற ரூ.350 கட்டணம் செலுத்தவேண்டும்.
8.வாகன ஓட்டுநர் உரிமம் பெற என்னென்ன சான்றுகள் தேவை?
இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை, எல்.ஐ.சி. பாலிசி சான்று, வயதுச் சான்றாக பள்ளி மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) போன்ற அரசு வழங்கிய சான்றுகள், பாஸ்போர்ட் அளவில் 3 புகைப்படங்களுடன் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெறுவதற்கு ‘படிவம் 2’-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
50 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மருத்துவச் சான்றிதழுடன் ‘படிவம் 1’-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும், இரு சக்கர வாகன பழகுநர் உரிமம் பெற ரூ. 30-ம், அதனுடன் சேர்த்து நான்கு சக்கர வாகன பழகுநர் உரிமம் பெற ரூ. 60-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
9.பெறலாம்?
பழகுநர் உரிமம் 6 மாதம் வரை செல்லுபடியாகும். பழகுநர் உரிமம் பெற்று, ஒரு மாதத்துக்கு பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். ஒரு மாத கால இடைவெளி, வாகனங்களை நன்றாக ஓட்டிப் பழகுவதற்காக வழங்கப்படுகிறது. பழகுநர் உரிமம் பெறும்போது, வாகனத்தை ஓட்டிக் காட்டுவதோடு சாலை விதிகள் குறித்த கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்க வேண்டும்.
10. மாற்றுத் திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெறமுடியுமா?
மாற்றுத் திறனாளிகளின் உடல் சார்ந்த பிரச்சினைக்கு ஏற்ப அவர்கள் எளிதில் இயக்கும்படி வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகள் இரு சக்கர வாகனங்களை இயக்க கூடுதல் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் பின்னால் வரும் வாகனங்களின் ஒலியைக் கேட்க இயலாது என்பதால் அவர்களது வாகனத்தின் டேஷ் போர்டு சிக்னல் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வாகனம் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளி பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மாற்றுத் திறனாளிகள் வாகன ஓட்டுநர் உரிமம் பெறலாம்.
11. ஓட்டுநர் உரிமத்தின் கால அளவு எத்தனை ஆண்டுகள்?
அது வயதை பொருத்தது. ஒருவர் 20 வயதில் ஓட்டுநர் உரிமம் பெற்றால் அவருக்கு 40 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். பின்னர், புதுப்பிக்க 20 ஆண்டு கால அளவு வழங்கப்படும். 39 வயதில் ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெற்றால் ஓர் ஆண்டு வரை- அதாவது 40 வயது வரை மட்டுமே உரிமம் வழங்கப்படும். 40 வயதுக்கு பின்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். அதற்கு ரூ.250 கட்டணம்.

Share:

வாகனப் பதிவு நடைமுறைகள்



வாகனப் பதிவு நடைமுறைகள்
1.வாகனப் பதிவு என்றால் என்ன?
வாகனப் பதிவு என்பது அந்த வாகனத்தின் அடையா ளம். சம்பந்தப்பட்ட வாகனத்தின் முழு விவரமும் வாகனப் பதிவு சான்றிதழில் இடம் பெறும்.
2.ஏன் வாகனப் பதிவு செய்ய வேண்டும்?
25 சி.சி. திறன் தொடங்கி அதற்கு அதிகமான சி.சி. திறன் கொண்ட வாகனங்கள் எதுவும் மோட்டார் வாகன சட்டத்தின்படி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படாமல் சாலையில் இயங்கக் கூடாது. அதற்காக வாகனத்தை பதிவு செய்ய வேண்டும்.
3.எத்தனை நாட்களுக்குள் வாகனத்தைப் பதிவு செய்ய வேண்டும்?
வாகனத்தை வாங்கியதில் இருந்து 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வாகனம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத் தில் பதிவு செய்யப்பட வேண்டும். மோட்டார் வாகனச் சட்டப்படி பதிவு செய்யாமல் வாகனங்களை சாலையில் இயக்கக் கூடாது. அவ்வாறு இயக்குவது சட்டப் படி குற்றமாகும். அப்படி இயக்கினால் அபராதம் விதிக்கப் படும்.
4.வாகனப் பதிவில் என்னென்ன வகைகள் உள்ளன?
தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவு என இரு வகை உண்டு. சிலர் வாகனத்தை சொந்த மாவட்டம், மாநிலம் நீங்கலாக வேறு இடத்தில் வாங்க நேரிடும். எனினும் பதிவு செய்யாமல் வாகனங்களை சாலையில் இயக்கக்கூடாது என்பதால், வாகனம் வாங்கிய இடத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இது தற்காலிகப் பதிவு. இந்தப் பதிவு ஒரு மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் தங்களது வாகனங்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர் தங்கள் சொந்த ஊருக்கு எடுத்து வந்து நிரந்தரப் பதிவு செய்து கொள்ளவேண்டும்.
5.வாகனப் பதிவுக்கான வழிமுறைகள் என்ன?
வாகன விற்பனையாளர், அதை வாங்குவோரிடம் பதிவு செய்யாமல் வழங்கக் கூடாது என மோட்டார் வாகனச் சட்டம் சொல்கிறது. அதன்படி படிவம் 20, 21 உட்பட இருப்பிடச் சான்று, வாகனத்தை விற்பனை செய்ததற்கான படிவம் மற்றும் வாகனத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
6.வாகனப் பதிவின் வகைகள் அறிவோம்
# இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கனரக வாகனம் பதிவு செய்யும் முறையில் வித்தியாசம் உள்ளதா?
இருசக்கர வாகனங்கள், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் முழுவதுமாக பாடி கட்டப்பட்ட பிறகே விற்கப்படுகின்றன. அவற்றை எவ்வித மாற்றமும் செய்யாமல் சாலையில் ஓட்டுகிறோம். அவற்றுக்கு எப்படி வாகனப்பதிவு செய்வது என்று நேற்று பார்த்தோம். லாரி, பேருந்து போன்ற வாகனங்கள் பாடி கட்டாத நிலையில் விற்கப்படுகின்றன.
வாங்குவோர்தான் மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைக்கு உட்பட்டு பாடி கட்டிக்கொள்ள வேண்டும். மோட்டார் வாகன சட்டப்படி வாகனத்துக்கு பாடி கட்டியிருப்பதாக பாடி கட்டுவோர் சான்று வழங்குவர். அந்த சான்றுடன் இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றையும் சமர்ப்பித்து கனரக வாகனங்களை பதிவு செய்ய வேண்டும்.
7. வாகனப் பதிவுக்கு கட்டணம் எவ்வளவு?
இலகு ரக வாகனம், மத்திய ரக வாகனம், கனரக வாகனம் என வாகனங்கள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. 7 ஆயிரம் கிலோ வரை உள்ளவை இலகு ரக வாகனம். அதற்கு பதிவுக் கட்டணம் ரூ.300 ரூபாய். 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கிலோ வரை உள்ள மத்திய ரக வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.400. 12 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட கனரக வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.500. இருசக்கர வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.30.
8.சொந்த ஊர் இல்லாத மாவட்டம், மாநிலத்தில் வாகனம் பதிவு செய்ய முடியுமா?
வாகனங்களை எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம். அவ்வாறு வாங்கும் இடத்தில் வீடு அல்லது அலுவலக முகவரி இருக்கவேண்டும். அதற்கான சான்று இருந்தால் மட்டுமே வாகனம் வாங்கும் இடத்தில் அவற்றை பதிவு செய்ய முடியும். இல்லாவிட்டால், தற்காலிகமாக பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பிறகு நிரந்தர, தற்காலிக முகவரி உள்ள பகுதிக்கு வந்து, அந்த எல்லைக்கு உட்பட்ட வட்டார போக்குவரத்து அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
9.வங்கிக் கடன் மூலம் வாங்கும் வாகனங்களுக்கு பதிவுச் சான்று (ஆர்.சி.) யாரிடம் வழங்கப்படும்?
வாகன உரிமையாளரிடம் மட்டுமே வாகனப் பதிவுச் சான்று வழங்கப்படும். வங்கிக் கடன் மூலம் வாகனம் வாங்கியிருந்தால் அடமானம் என பதிவுச் சான்றில் குறிப்பிடப்பட்டிருக்கும். வங்கிக் கடன் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட வங்கி மூலம் நிலுவையில்லாச் சான்று வழங்கப்படும்.
அதை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொடுத்து, ‘அடமானம்’ என்று குறிப்பிட்டிருப்பதை நீக்கம் செய்துகொள்ளலாம். வங்கிக் கடனை சரிவர செலுத்தாத பட்சத்தில், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பைனான்சியரிடம் பதிவுச் சான்று வழங்கப்படும்.
10.பொதுப் போக்குவரத்து வாகனத்துக்கு பர்மிட் ஏன் அவசியம்?
# பொதுப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனத்துக்கு அனுமதி பெறவேண்டியது எதற்காக?
சாலை வரி உள்ளிட்டவற்றை செலுத்திவிட்டுத்தான் கார் போன்ற சொந்த வாகனங்களை வாங்குகிறோம். அதனால், வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது அங்கு தனியாக சாலை வரி செலுத்தத் தேவையில்லை. அதனால்தான் அவற்றுக்கு அனுமதி (பர்மிட்) தேவையில்லை.
அதே வாகனத்தை பொதுப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தும்போது அனுமதி பெற வேண்டும். ஏனெனில் வெளி மாநிலத்துக்கு செல்ல நேர்ந்தால் ஆகும் சாலை வரியைத்தான் பர்மிட் கட்டணமாக வசூலிக்கிறார்கள். ஒரு வாகனம் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏற்றதுதானா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து, பின்னர் அதை சாலையில் பொதுப் போக்குவரத்துக்கு இயங்க அனுமதி அளிப்பர். இது லாரி போன்ற சரக்கு வாகனங்களுக்கும் பொருந்தும்.
11.இவ்வாறு அனுமதி வழங்குவதில் எத்தனை வகைகள் உள்ளன?
ஒப்பந்த ஊர்தி அனுமதி (கான்டிராக்ட் கேரேஜ் பர்மிட்), பொது சரக்கு வாகன அனுமதி (கூட்ஸ் கேரேஜ் அனுமதி), நிலைய அனுமதி (ஸ்டேஜ் கேரேஜ் பர்மிட்) என மூன்று வகைகளில் அனுமதி வழங்கப்படுகிறது. பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ, மேக்ஸி கேப் போன்ற வாகனங்களுக்கு ஒப்பந்த ஊர்தி அனுமதி வழங்கப்படுகிறது. லாரி போன்ற வாகனங்களுக்கு பொது சரக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அதிலும் மாநிலம் மற்றும் தேசிய அனுமதி என இரு முறைகளில் அனுமதி வழங்கப்படுகிறது. பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லும் பேருந்துகளுக்கு நிலைய அனுமதி வழங்கப்படுகிறது.
12.அனுமதி பெறுவதற்கான கட்டணம், அவற்றுக்கான கால அளவு எவ்வளவு?
கார் போன்ற ஒப்பந்த ஊர்திகளுக்கு ரூ.325, பொது சரக்கு வாகனங்களுக்கு ரூ.750 கட்டணமாக செலுத்தவேண்டும். அதிலும், நாடு முழுவதும் ஒரு வாகனத்தை இயக்க தேசிய அனுமதி பெற வேண்டும். அதற்கு ரூ.1,450 மற்றும் ரூ.500 கட்டணம் செலுத்தவேண்டும்.
இந்த அனுமதி 5 ஆண்டு காலத்துக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன்பின், அனுமதியை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதே நேரம், போக்குவரத்து வாகனங்களுக்கான வரியை ஒவ்வொரு காலாண்டும் செலுத்த வேண்டும். அல்லது, ஆண்டுக்கு ஒருமுறை நான்கு காலாண்டுக்கான வரியை சேர்த்து ஒரே முறையாகவும் செலுத்தலாம்.
13.வாகன பர்மிட் பெற வழிமுறை என்ன?
வாகனங்களுக்கு அனுமதி (பர்மிட்) பெறும் வழிமுறைகள் என்ன?
வாகனங்களுக்கு பல்வேறு வகைகளில் பர்மிட் வழங்கப்படுகின்றன என்பதைப் பார்த்தோம். வாகனங்களுக்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உள்ளன. அவற்றை பெற்று இருப்பிடச் சான்று, வாகன தகுதிச் சான்று, வாகனப் பதிவுச் சான்று உள்ளிட்டவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அவை சரியாக இருந்தால், ஒரே நாளில் பர்மிட் வழங்கப்படும்.
வாகனம் இல்லாமல்கூட, பர்மிட் கேட்டு விண்ணப்பம் செய்யலாம். அதற்கு செயல்முறை ஆணை வழங்கப்படும். அந்த ஆணை 3 மாத காலம் வரை மட்டும் செல்லுபடியாகும். அதன்பின், செயல்முறை ஆணை தானாக காலாவதியாகிவிடும். அதற்குள், சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு உரிய தகுதிச் சான்று, வாகனப் பதிவு போன்ற ஆவணங்களை வழங்கினால் பொது போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படும்.
14.தற்காலிக அனுமதி என்றால் என்ன?
தேசிய அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே நாடு முழுவதும் வாகனத்தை இயக்க முடியும். ஒரு மாநிலத்துக்குள் இயக்கும் அனுமதி பெற்றிருந்தால், மாநிலத்துக்குள் மட்டுமே இயக்க முடியும். அவ்வாறு மாநில அனுமதி பெற்ற போக்குவரத்து வாகனம், வெளிமாநிலத்துக்கு செல்ல நேரிட்டால் அவற்றுக்கு சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து, மோட்டார் வாகன அலுவலகத்தில் தற்காலிக அனுமதி வழங்கப்படுகிறது.
15.தற்காலிக அனுமதி பெறாத சூழலில் அவசரமாக வெளி மாநிலம் செல்ல நேர்ந்தால் என்ன செய்வது?
பிரச்சினை இல்லை. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக அனுமதி பெற முடியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாநில எல்லையில் சோதனைச் சாவடியில் தற்காலிக போக்குவரத்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
16.தற்காலிக போக்குவரத்து வாகன அனுமதி கட்டணம், வரி எவ்வளவு?
வெளி மாநிலங்களுக்குச் செல்ல ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் வாகன வரி வேறுபடும். எனவே, எந்த மாநிலத்துக்குச் செல்ல வேண்டுமோ அந்த மாநிலத்துக்கான வாகன வரியில் 10-ல் ஒரு பங்கு செலுத்தி தற்காலிக போக்குவரத்து அனுமதி பெறலாம்.
இந்த அனுமதி 7 நாட்கள், ஒரு மாதம், 3 மாதங்கள் என்ற அளவில் வழங்கப்படுகிறது. 7 நாட்களுக்கு மேல் ஒருநாள் தங்கும் சூழல் ஏற்பட்டாலும் ஒரு மாத வரி செலுத்த வேண்டும். அதுபோல, ஒரு மாதத்துக்கு மேல் ஒருநாள் தங்க நேரிட்டாலும் 3 மாத வரி செலுத்தவேண்டும்.
17.வாகனங்களுக்கு ஃபேன்ஸி எண் வாங்குவது எப்படி?
# எதன் அடிப்படையில் வாகனங்களுக்கு பதிவு எண்கள் வழங்கப்படுகின்றன?
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தையும் அடையாளப்படுத்தும் வார்த்தைகள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. உதாரணமாக தமிழகப் பதிவெண் கொண்ட அனைத்து வாகனங்களிலும் ஆங்கிலத்தில் TN என எழுதப்பட்டிருக்கும். TN என்பது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதுபோல, கேரளத்துக்கு KL, கர்நாடகத்துக்கு KA, புதுச்சேரிக்கு PY என ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே ஆங்கில எழுத்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து வரும் 2 எண்கள், அதாவது TN என்ற எழுத்தைத் தொடர்ந்து வரும் 01, 02, 30, 88 என்பன போன்ற எண்கள் மாநில அரசால் ஒதுக்கப்படுகின்றன. இந்த எண்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களைக் குறிக்கும் எண்களாகும். அதற்கு அடுத்து வரும் நான்கு இலக்க எண்கள் 1 முதல் 9999 வரை வரிசைப்படி வாகனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அந்த எண்கள் முடிந்த பின் A என, அகர வரிசைப்படி மீண்டும் 1 முதல் 9999 எண் வரை வரிசைப்படி ஒதுக்கப்படும். அடுத்து B, C, D, E... என அடுத்தடுத்து செல்லும்.
18.வரிசைப்படி எண்கள் ஒதுக்கப்படும்போது, தானாகவே ஃபேன்ஸி எண் கிடைத்துவிட வாய்ப்பு இருக்கிறதா?
1 முதல் 9999 வரை 1111, 2222 என்பது போல மொத்தம் 98 எண்கள் ஃபேன்ஸி எண்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. வரிசைப்படி எண் ஒதுக்கப்படும்போது, இந்த எண்கள் கிடைக்காது. அரசின் வருவாய் கருதி, அந்த எண்கள் யாருக்கும் இலவசமாக வழங்கப்படுவதில்லை.
ஃபேன்ஸி எண் வேண்டுவோர் சென்னை தலைமைச் செயலக உள்துறை (போக்குவரத்து) அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து குறிப்பிட்ட எண் வேண்டும் என்று உத்தரவு பெற்று வரவேண்டும். அவ்வாறு பெற்று வந்தால் ஃபேன்ஸி எண் வழங்கப்படும்.
19.ஃபேன்ஸி எண் வழங்க வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அனுமதி உள்ளதா?
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆயிரம் வரை உள்ள நடப்பு எண் வாகனங்களுக்கு வழங்கப்படும். உதாரணமாக ஒரு நாளைக்கு 500 வாகனங்களுக்கு மட்டும் எண்கள் வழங்கப்பட்டால். மறுநாள் 500-ல் இருந்து ஆயிரம் எண்கள் வரை வாகனங்களுக்கு வழங்கலாம். அதில் உள்ள ஃபேன்ஸி எண்களை வாகனங்களுக்கு வழங்குவதற்கும் கட்டணம் உள்ளது. அந்த எண்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஒதுக்க அனுமதி உள்ளது.
20.வாகனத்துக்கு பேன்ஸி எண் பெற கட்டணம் எவ்வளவு?
# வாகனத்துக்கு பேன்ஸி எண் பெற கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும்?
இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு அதன் மதிப்பு நான்கு லட்சம் ரூபாய் வரை இருந்தால் ரூ.10 ஆயிரமும், நான்கு லட்சத்துக்கும் மேல் வாகன மதிப்பு இருந்தால் ரூ.16 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
மொத்தமுள்ள 98 பேன்ஸி எண்களில் ஆங்கில அகர வரிசைப்படி ஏ, பி, சி, டி என்ற வரிசையில் எண்கள் ஒதுக்கினால் ரூ. 40 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு அடுத்து வரும் சீரியல்களில் எண்கள் ஒதுக்க ரூ. 60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்வரை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இந்த 98 எண்களையும் யாரும் கேட்கவில்லை எனில், அடுத்துவரும் ஆங்கில அகர வரிசை சீரியலில் ஒதுக்கப்படும் எண்களோடு சேர்த்து வாகனங்களுக்கு வழங்கப்படும்.
21. வாடகைக்கு இயக்கும் வாகனங்கள், சொந்த வாகனங்களை எவ்வாறு கண்டறியலாம்?
வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்களின் நம்பர் பிளேட் மஞ்சள் நிறத்திலும், எண்கள் கறுப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்கும். சொந்த வாகனம் என்றால் நம்பர் பிளேட் வெள்ளை நிறத்திலும், எண்கள் கறுப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்கும். எண்கள் எழுதும் பிளேட்டில் எண்களை தவிர, பெயர் உள்ளிட்ட எதுவும் இருக்கக்கூடாது. அதேபோல் புரியாத மொழியிலும், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களுக்கு இருக்கும் எண்களையும் நம்பர் பிளேட்டில் எழுதக்கூடாது. அப்படி எழுதுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
22.வாகனங்களில் எவ்வாறு எண்கள் எழுதலாம்? அதற்கு ஏதேனும் அளவுகள் உள்ளதா?
இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் அதிக திறன் கொண்ட வாகனங்கள் என ஒவ்வொரு வாகனத்துக்கும் குறிப்பிட்ட அளவுகளில் எண்கள் எழுத வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத்தில் விதி உள்ளது. அந்த அளவுகளைக் காட்டிலும் வேறு வடிவங்களில் எண்கள் எழுத கூடாது. அவ்வாறு எழுதினால், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சோதனையின்போது அபராதம் விதிக்கப்படும்.
23.வாகன எண்களை வைத்து சம்பந்தப்பட்டவரின் முழு முகவரி உள்ளிட்ட விவரங்களை பெற முடியுமா?
கட்டாயம் பெற முடியும். வாகன எண்கள் மூலம் சம்பந்தப்பட்டவரின் பெயர், முகவரி ஆகியவற்றை அறிய முடியும். அதற்காகத்தான் வாகனங்களில், மோட்டார் வாகனச் சட்ட விதிப்படி எண்களை எழுத வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Share:

வாகன "நெம்பர் பிளேட்டுகளில்' விதிமீறல்




வாகன "நெம்பர் பிளேட்டுகளில்' விதிமீறல் 

வாகனங்களின் பதிவெண் எழுத வேண்டிய "நெம்பர் பிளேட்டுகள்'
சமீபகாலமாக விளம்பரம், அறிவிப்பு பலகையாக மாற்றப்பட்டு வருவதால் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இதனால் விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது. மோட்டார் வாகனங்களை முறைப்படுத்தவும், விபத்தில் சிக்கும் வாகனங்களை கண்டறியவும் போக்குவரத்து விதி மீறலை தடுத்திட வாகனங்களுக்கு பதிவெண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வாகனத்திற்கும் முன், பின் பதிவெண் எழுத வேண்டும். சொந்த வாகனத்தில் வெள்ளை நிற நெம்பர் பிளேட்டுகளில் கருப்பு நிறத்திலும், வாடகை வாகனத்தில் மஞ்சள் நிற நெம்பர் பிளேட்டில் கருப்பு நிறத்தில் எழுத வேண்டும். இந்த பதிவெண்களை சாலைகளில் குறைந்தபட்சம் 10 மீட்டர் இடைவெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் எழுத வேண்டும் என்பதற்காக நெம்பர் பிளேட் அளவு, எழுத்தின் அளவு, கனம் மற்றும் இரு எண்களுக்கு இடையே உள்ள இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும் என ( விவரம்: பெட்டி செய்தியில்) வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இருசக்கர வாகனங்களில் பதிவெண்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எழுதி வைத்துள்ளனர். வட்டார போக்குவரத்து அலுவலக குறியீடு (டி.என்.) சிறியதாகவும், பதிவெண்ணில் நான்கு இலக்க எண்களில் "நியூமராலஜி'படி ஏதேனும் ஒரு எண்ணை பெரிதாகவும், மற்ற எண்களை சிறியதாக எழுதியுள்ளனர். சிலர் தங்களை தமிழ் ஆர்வலர்களாக காட்டிக் கொள்ள குறியீடு எண் மற்றும் பதிவெண் அனைத்தையும் தூய தமிழில் எழுதி வைத்துள்ளனர். இன்னும் ரத்தம் சொட்டும் கத்தி, வீச்சரிவாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் வரைந்து வைத்துள்ளனர். இதுபோன்ற வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறிச் செல்லும் போதோ அல்லது விபத்து ஏற்படுத்திச் சென்றாலோ பதிவெண்ணை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது.
இன்னும் பலர் வாகனங்களின் நெம்பர் பிளேட்டுகளை விளம்பரம், அறிவிப்பு பலகையாகவும், சிலர் பெயர் பலகையாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அரசு துறைகளில் பணிபுரிபவர்கள் பலர் தங்களது வாகனங்களின் நெம்பர் பிளேட்டுகளில் தாங்கள் பணிபுரியும் அரசு துறையின் "போலீஸ்", "நீதித்துறை' மின் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, வருவாய் துறை, சுகாதரம், வனத்துறை, கல்வித்துறை என பெரிதாகவும், பதிவெண்ணை சிறிதாகவும் எழுதி வைத்துள்ளனர். சிலர் கட்சியின் சின்னத்தையும், குடும்ப உறுப்பினர்களின் படங்கள், சுவாமி படங்களை ஒட்டியுள்ளனர். சிலர் "பிரஸ்' (பத்திரிகையாளர்) என எழுதி வைத்துள்ளனர். இன்னும் சிலர் ஒருபடி மேலாக சோதனை செய்யும் போலீசாரை மிரட்டும் தொணியில் நெம்பர் பிளேட்டுகளில் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் படங்களையும் வைத்துள்ளனர். இவ்வாறு அரசு துறைகளின் பெயர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஒட்டிய வாகனங்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்ய அஞ்சுகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு திருடர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் ஏதேனும் அரசு துறை பெயர் (குறிப்பாக "போலீஸ்') அல்லது அரசியல் கட்சி தலைவரின் பட ஸ்டிக்கரை நெம்பர் பிளேட்டில் ஒட்டிவிட்டு எளிதாக தப்பிச் செல்கின்றனர். வழிப்பறியில் ஈடுபடுபவர்கள், வாகனத்திற்கு ஆவணங்கள் இல்லாதவர்களும் இதே முறையை பின்பற்றுகின்றனர். இதன் காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களில் அரசு துறைகளின் (அரசு வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்) பெயர்கள் எழுதப்பட்டுள்ளதால் போலீசார் வாகன தணிக்கை செய்யவே தயங்குகின்றனர்.

Share:

வாகனப் பதிவெண்கள் மற்றும் எழுத்துக்களின் அளவுகள்


உங்கள் வாகனங்களில் நம்பர் பிளேட்களை விதிமீறி எழுதியுள்ளீர்களா?
விதிப்படி மாற்றி எழுதுங்கள்; இல்லையேல் நீங்கள் வாகனம் ஓட்ட முடியாது.....
தூரத்தில் இருந்து பார்த்தால் இரட்டை இலக்க எண்கள்... அருகில் பார்த்தால் நான்கு இலக்க எண்கள்... இப்படிதான் மோட்டார் சைக்கிள், கார்களின் வாகன பதிவெண்கள் எழுதப்படுகின்றன. எண்களை ஆங்கில எழுத்தாக வடிவமைத்து வலம் வருபவர்களும் உண்டு. தவிர, நம்பர் பிளேட்டில் எழுத்துகளைவிட, தலைவர்களின் படங்களும் "பளிச்'சிடுகின்றன. "பஞ்ச்' டயலாக்குகளுக்கும் பஞ்சமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, நம்பர் பிளேட்களை மோட்டார் வாகன சட்டப்படிதான் எழுத வேண்டும்.
வாகன எண்கள் பின் வறுமாறு எழுதப்படவேண்டும்.
Share:

Visited

FIND ME ON TWITTER

POSTS FROM FACEBOOK

Recent Posts