இல்லை... இல்லை... இல்லவே இல்லை ....


இல்லை... இல்லை...  இல்லவே இல்லை  ....


  1. ஆமைக்குப் பற்கள்  இல்லை.
  2. ஒட்டகத்திற்கு வியர்வை நாளங்கள் இல்லை.
  3. கிவி எனும் பறவைக்கு இறக்கைகள் இல்லை.
  4. மாங்ஸ் மற்றும் சயா எனும் பூனை வகைகளுக்கு வால் இல்லை.
  5. மீன்களுக்கு உமிழ்நீர் சுரப்பி இல்லை.
  6. அன்னாசி பழத்திற்கு விதைகள் இல்லை.
  7. நமது உதடுகள் வியர்ப்பது இல்லை.
  8. நமது கருவிழியில் இரத்தம் பாய்வது இல்லை.
  9. குயில்கள் கூடு கட்டுவது இல்லை.
  10. பன்னீர்ப் பூ பகலில் மலர்வது இல்லை.
  11. நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் இல்லை.
  12. ஹவாய் தீவில் பாம்புகள் இல்லை.
  13. யமுனை ஆறு கடலில் கலப்பது இல்லை. 
  14. குவைத் நாட்டில் ஆறுகள் இல்லை.
  15. சவூதி அரேபியா நாட்டில் நதிகள் இல்லை. 
  16. பூடான் நாட்டில் திரையரங்குகள் இல்லை. 
  17. மாசிடோனியா நாட்டிற்கு தேசியக்கொடி இல்லை. 
  18. பிரான்ஸ் நாட்டில் திரைப்படத்திற்கு தணிக்கைமுறை இல்லை. 
  19. ஜோர்டான் எனும் ஆற்றில் மீன்களே  இல்லை. 
  20. காந்தியடிகள் விமானத்தில் பயணித்ததே இல்லை. 
Share:

பருவங்கள் ஏழு

பருவங்கள் ஏழு


ஆண்களின் ஏழு பருவங்கள்

  1. பாலன்............1 முதல் 7 வயது வரை
  2. மீளி.................8 முதல் 10 வயது வரை 
  3. மறவோன்....11 முதல் 14 வயது வரை
  4. திறவோன்....15வது  வயது
  5. காளை...........16வது  வயது
  6. விடலை.......17 முதல் 30 வயது வரை
  7. முதுமகன்....30 வயதுக்கு மேல்.

பெண்களின் ஏழு பருவங்கள்


  1. பேதை  ...................5 வயது முதல் 7 வயது வரை
  2. பெதும்பை...........  8 வயது முதல் 11 வயது வரை
  3. மங்கை................. 12 வயது முதல் 13 வயது வரை
  4. மடந்தை...............14 வயது முதல் 19 வயது வரை
  5. அரிவை............... 20 வயது முதல் 25 வயது வரை
  6. தெரிவை............. 26 வயது முதல் 31 வயது வரை
  7. பேரிளம் பெண். 32 வயது முதல் 40 வயது வரை

பூவின் ஏழு பருவங்கள்

  1. அரும்பு............அரும்பும் நிலை 
  2. மொட்டு...........மொட்டு விடும் நிலை 
  3. முகை..............முகிழ்க்கும் நிலை
  4. மலர்.................மலரும் நிலை 
  5. அலர்................மலர்ந்த நிலை 
  6. வீ.......................வாடும் நிலை
  7. செம்மல்.........வதங்கும் நிலை
Share:

ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு...

ஆயக்கலைகள்


ஆதித்தமிழன் கண்டறிந்து கற்று, தலைமுறை தலைமுறையாக  கற்பித்து  வந்த கலைகளே  
ஆயக்கலைகள்.ஆயக்கலைகள் அறுபத்தி நான்கென்று நாமறிந்ததே எனினும் அவை, எவையெவை என நம்மில் அறிந்தவர்கள் எத்தனை பேர் என வினவினால் விழிபிதுங்கும் நமக்கு... (நான் உட்பட)
அப்படி அந்த அறுபத்தி நான்கு என்னென்ன என நான் அறியமுற்பட்டதில் கிடைத்த தகவல்கள் 
இங்கே நமக்காக....

1. எழுத்திலக்கணம் - அகரவிலக்கணம்
2.  எழுத்தாற்றல் -  லிகிதம்
3. கணிதவியல் - கணிதம்
4. மறைநூல் - வேதம்
5. தொன்மம் - புராணம்
6. இலக்கணவியல்  - வியாகரணம்
7. நயனூல் - நீதி சாத்திரம்
8. கணியம்  - சோதிட சாத்திரம்
9. அறநூல் - தரும சாத்திரம்
10. ஓகநூல் - யோக சாத்திரம்
11. மந்திர நூல் - மந்திர சாத்திரம்
12. நிமித்திக நூல் - சகுன சாத்திரம்
13. கம்மிய நூல் - சிற்ப சாத்திரம்
14. மருத்துவ நூல் -  வைத்திய சாத்திரம்
15. உறுப்பமைவு நூல் - உருவ சாத்திரம்
16. மறவனப்பு - இதிகாசம்
17. வனப்பு - காவியம்
18. அணிநூல் - அலங்காரம்
19. மதுரமொழிவு - மதுரபாடணம்
20. நாடகம் - நாடகக்கலை
21. நடம் - நிருத்தம்
22. ஒலிநுட்ப அறிவு - சத்தப் பிரமம்
23. யாழ் - வீணை);
24. குழல் - வேனு
25. மதங்கம் - மிருதங்கம்
26. தாள இயல் - தாளம்
27. விற்பயிற்சி - அகத்திரவித்தை
28. பொன் நோட்டம் - கனக பரீட்சை
29. தேர்ப்பயிற்சி - ரத ப்ரீட்சை30. யானையேற்றம் - கச பரீட்சை
31. குதிரையேற்றம் - அசுவ பரீட்சை
32. மணிநோட்டம் - ரத்தின பரீட்சை
33. நிலத்து நூல்/மண்ணியல் - பூமி பரீட்சை
34. போர்ப்பயிற்சி - சங்கிராமவிலக்கணம்
35. மல்லம்  - மல்ல யுத்தம்
36. கவர்ச்சி - ஆகருடணம்
37. ஓட்டுகை - உச்சாடணம்
38. நட்புப் பிரிப்பு - வித்துவேடணம்
39. காமநூல் - மதன சாத்திரம்
40. மயக்குநூல் - மோகனம்
41. வசியம் - வசீகரணம்
42. இதளியம் - ரசவாதம்
43. இன்னிசைப் பயிற்சி - காந்தருவ வாதம்
44. பிறவுயிர் மொழியறிகை - பைபீல வாதம்
45. மகிழுறுத்தம் - கவுத்துக வாதம்
46. நாடிப்பயிற்சி - தாது வாதம்
47. கலுழம் - காருடம்
48. இழப்பறிகை - நட்டம்
49. மறைத்ததையறிதல் - முஷ்டி
50. வான்புகவு - ஆகாயப் பிரவேசம்
51. வான்செலவு - ஆகாய கமனம்
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் - பரகாயப் பிரவேசம்
53. தன்னுருக் கரத்தல் - அதிருசியம்
54. மாயச்செய்கை - இந்திரசாலம்
55. பெருமாயச்செய்கை- மகேந்திரசாலம்
56. அழற்கட்டு - அக்கினித் தம்பனம்
57. நீர்க்கட்டு - சலத்தம்பனம்
58. வளிக்கட்டு - வாயுத்தம்பனம்
59. கண்கட்டு - திருட்டித்தம்பனம்
60. நாவுக்கட்டு - வாக்குத்தம்பனம்
61. விந்துக்கட்டு - சுக்கிலத்தம்பனம்
62. புதையற்கட்டு - கனனத்தம்பனம்
63. வாட்கட்டு - கட்கத்தம்பனம்
64 அவத்தை பிரயோகம் - சூனியம்

Share:

தமிழக வாகன குறியீட்டு எண்கள்...



தமிழக வாகன குறியீட்டு எண்கள்..



பயணங்கள் என்பது நம் வாழ்வோடு பிண்ணிப்பிணைந்தது. அவற்றில் பெரும்பங்குவகிப்பது வாகனங்கள்.நம் வாழ்வில் நம்மைக்கடந்து செல்லும் வானங்கள் பற்ப்பல.சில வாகனங்கள் நம்மை கடந்துசெல்வதுமட்டுமல்லாது நம்முள்சில தாக்கங்களையும் ஏற்ப்படுத்திச்செல்வதுண்டு அத்தகைய வானங்களைப்பற்றி சில தகவல்கள் நமக்காக இங்கே.....நம் நாட்டில் வாகனங்களுக்கு மாநிலங்கள் , மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகள் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் "TN-NN X NNNN" என்ற வடிவில் உள்ளன. KL என்ற எழுத்து முன்னொட்டு அனைத்து கேரளா வாகனங்களுக்கும்TN என்ற எழுத்து முன்னொட்டு அனைத்து தமிழ்நாட்டு வாகனங்களுக்கும் பொதுவானது. இதையடுத்து வரும் இரு எண்கள் வாகனம் பதிவு செய்யப்படும் மாவட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தைப் பொறுத்து மாறும். அப்பதிவெண்களின் பட்டியல் இங்கே....
TN-01 சென்னை அயனாவரம்

TN-02 சென்னை அண்ணாநகர்

TN-03 சென்னை தண்டையார்பேட்டை

TN-04 சென்னை ராயபுரம்

TN-05 சென்னை குளத்தூர்

TN-06 சென்னை மந்தைவெளி

TN-07 சென்னை திருவான்மியூர்

TN-09 சென்னை கே.கே.நகர்

TN-10 சென்னை விருகம்பாக்கம்

TN-11 சென்னை தாம்பரம்

TN-12 சென்னை பூந்தமல்லி

TN-13 சென்னை அம்பத்தூர்

TN-14 சென்னை சோலிங்கநல்லூர்

TN-15 உளுந்தூர்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி

TN-16 திண்டிவனம் மற்றும் செஞ்சி

TN-18 சென்னை செங்குன்றம்

TN-19 செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம்

TN-20 திருவள்ளூர்

TN-21 காஞ்சிபுரம் மற்றும் திருப்பெரும்புதூர்

TN-22 மீனம்பாக்கம்

TN-23 வேலூர் மற்றும் குடியாத்தம்

TN-24 கிருஷ்ணகிரி

TN-25 திருவண்ணாமலை மற்றும் ஆரணி

TN-27 சேலம் (தற்பொழுது பயன்பாட்டில் இல்லை)

TN-28 நாமக்கல் வடக்கு மற்றும் ராசிபுரம்

TN-29 தர்மபுரி,பாலக்கோடு மற்றும் அரூர்

TN-30 சேலம் மேற்கு மற்றும் ஓமலூர்

TN-31 கடலூர், விருதாச்சலம், நெய்வேலி மற்றும்பண்ருட்டி

TN-32 விழுப்புரம்

TN-33 ஈரோடு கிழக்கு

TN-34 திருச்செங்கோடு

TN-36 கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பவானி

TN-37 கோயம்புத்தூர் தெற்கு மற்றும் சூலூர்

TN-38 கோயம்புத்தூர் வடக்கு

TN-39 திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி

TN-40 மேட்டுப்பாளையம்

TN-41 பொள்ளாச்சி மற்றும் வால்பாறை

TN-42 திருப்பூர் தெற்கு மற்றும் காங்கயம்

TN-43 ஊட்டி மற்றும் கூடலூர்

TN-45 திருச்சிராப்பள்ளி மேற்கு மற்றும் மணப்பாறை

TN-46 பெரம்பலூர்

TN-47 கரூர், அரவக்குறிச்சி மற்றும் குளித்தலை

TN-48 திருவரங்கம்,முசிறி,துறையூர் மற்றும் லால்குடி

TN-49 தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை

TN-50 திருவாரூர் மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி

TN-51 நாகப்பட்டினம்

TN-52 சங்ககிரி மற்றும் மேட்டூர்

TN-54 சேலம் கிழக்கு

TN-55 புதுக்கோட்டை இலுப்பூர் மற்றும் அறந்தாங்கி

TN-56 பெருந்துறை

TN-57 திண்டுக்கல் பழனி

TN-58 மதுரை தெற்கு மற்றும் திருமங்கலம்

TN-59 மதுரை வடக்கு மற்றும் மேலூர்

TN-60 தேனி மற்றும் பெரியகுளம்
TN-61 அரியலூர்

TN-63 சிவகங்கை மற்றும் காரைக்குடி

TN-64 மத்திய மதுரை

TN-65 ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி

TN-66 மத்திய கோயம்புத்தூர்

TN-67 விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை

TN-68 கும்பகோணம்

TN-69 தூத்துக்குடி

TN-70 ஓசூர்

TN-72 திருநெல்வேலி மற்றும் வள்ளியூர்

TN-73 இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம்

TN-74 நாகர்கோவில்

TN-75 மார்த்தாண்டம்

TN-76 தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம்

TN-77 ஆத்தூர் மற்றும் வாழப்பாடி

TN-78 தாராபுரம் மற்றும் உடுமலைபேட்டை

TN-79 சங்கரன்கோவில்

TN-81 திருச்சிராப்பள்ளி கிழக்கு மற்றும் திருவரம்பூர்

TN-82 மயிலாடுதுறை மற்றும் சீர்காழி

TN-83 வாணியம்பாடி திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர்

TN-84 திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி

TN-85 சென்னை குன்றத்தூர்

TN-86 ஈரோடு மேற்கு

TN-87 சிதம்பரம்

TN-88 நாமக்கல் தெற்கு மற்றும் பரமத்தி வேலூர்

TN-90 சேலம் தெற்கு

TN-91 திருச்செந்தூர்

TN-99 கோயம்புத்தூர் மேற்கு.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான TN-/N எனக் குறிப்பிட்டுள்ள வாகனங்கள் தமிழில் குறிப்பிடப்படும் போது த.நா-/நா எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது தமிழ்நாடு/ நாட்டுடமையாக்கப்பட்டது என்பதன் சுருக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலகப் பயன்பாட்டு வாகனங்களில் TN-/G எனக் குறிப்பிட்டுள்ள வாகனங்கள் தமிழில் குறிப்பிடப்படும் போது த.நா-/அ எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது தமிழ்நாடு/அரசு என்பதன் சுருக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.


Share:

சரிகமபதநி என்பதன் அர்த்தம் தெரியுமா?

சரிகமபதநி ........

சரிகமபதநி என்பதன் அர்த்தம்  தெரியுமா?
சரிகமபதநி என்பது ஓர் கர்நாடக சங்கீதம்.
அதன் விரிவாக்கம் இங்கே.................

ச-சட்ஜமம் --மயிலின் அகவல்.
ரி-ரிஷபம் --காளையின் ஹூங்காரம்.
க -காந்தாரம் --ஆட்டின் குரல்.
ம -மத்யமம் --கொக்கின் குரல்.
ப -பஞ்சமம் --குயிலின் குரல்
த -தைவதம் --குதிரையின் கனைப்பு.
நி -நிஷாதம் --யானையின் பிளிறல்.
Share:

காளையார்கோவில்

காளையார்கோவில்

13-01-2014,திங்கட்கிழமை காலை 10.30 மணி
ஐந்து வருடங்களுக்குப் பிறகு அன்றுதான் எனது பாதம் அம்மண்ணை முத்தமிட்டது!
எனது பாதம் அம்மண்ணைத்தொட்டவுடன் எனக்குள் ஓர் இனம்புரியாத சந்தோசம்,பூரிப்பு,அளவற்ற மகிழ்ச்சி இன்னும் என்னன்னவோ.....
ஆம்! என்னை ஓர் ஆசிரியராக உருவாக்கிய ஊர் அல்லவா அது.
எனக்கு விபரம் தெரியவந்த பருவத்தில் உலகம் இதுதான் என உணரச் செய்த இடம். 

நான் எனது ஆசிரியர் பட்டயப் பயிற்சியை இங்குள்ள மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனத்தில் பயின்றிருக்காவிடில் என் வாழ்வின் பகுதி சந்தோசமான நாட்களை இழந்திருக்கக்கூடும்.அந்த அளவிற்கு
எனக்குள் ஓர் ஆனந்தத்தையும் அனுபவத்தையும் கொடுத்த ஊர்.
ஓர் சான்றிதழ் தேவைக்காக நான் அன்று அங்கு செல்ல நேர்ந்தது.

எனது நிறுவனத்தில் நான் பயின்ற வகுப்பறை,தங்கியிருந்த விடுதி,நண்பர்களுடன் வட்டமடித்த இடங்கள் இவையனைத்தும் பார்த்தபொழுது எனக்குள் ஓர் சோகம்,அத்தகைய தருணங்கள் மீண்டும் கிடைக்காதா என்ற ஏக்கம் ,விவரிக்க இயலாத அளவிற்கு மனதினுள் ஒரு தாக்கம்.சான்றிதழைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்ப நேர்கையில் தாயைவிட்டுப் பிரியும் சிறுபிள்ளைபோல் மனம் மௌனமாய் அழத்தொடங்கிற்று.............
காளையார்கோவில்-சிவகங்கை மாவட்டம்
--- கல்லைவெங்கட் என்கிற
சி.வெங்கடேசன்,
2007-2009
மாவட்டக் கல்விப் பயிற்சி நிறுவனம்,
காளையார்கோவில்.
Share:

Visited

FIND ME ON TWITTER

POSTS FROM FACEBOOK

Recent Posts