நினைவு
















மரத்தடி நிழல்
தொட்டில் தூக்கம்
அலைபாயும்
அவள் நினைவு!
Share:

தவம்

அவள்
விரல் தீண்ட
விரியும் குடை
குடை நனைக்கப்
பொழியும் மழை
தவமிருந்துப்
பெற்றனவோ?
#கார்காலக்கவிதைகள்

Share:

தொல்லைக்காட்சி

உறவுகளைக் கொன்ற
அரக்கன் #தொலைக்காட்சி!!
#WorldTelevisionDay
Share:

காலன்



கையிலிருக்கும் காலன்
கைப்பேசி.
#கவனம்_தேவை!
Share:

குழந்தைகள் தினம்


ஓர் எளிய நிகழ்வை
சிறப்பு நிகழ்வாய் மாற்ற
ஒரு குழந்தையின் சிரிப்பு
போதுமானதாய் இருக்கிறது.
#ChildrensDay2019
Share:

திறமை

திரையிட்டு மறைத்தாலும்
சில திறமைகள்
வெளிப்பட மறப்பதில்லை!
Share:

வலிகளும் ஏக்கங்களும்


அடிக்கடி ஆடைமாற்றும்
துணிக்கடை பொம்மைக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
வெயிலுடுத்தும் குழந்தைகளின்
வலிகளும் ஏக்கங்களும்
--கல்லைவெங்கட் திருச்சி



Share:

இசை

குரைக்கும் நாயருகில்
குறிப்பெடுக்கும்
#இசைக்கலைஞன்
Share:

உதவி

படமெடுக்கக்
கொடுப்பனவெல்லாம்
கொடையில்
வராதவை!
Share:

பகடி

படமெடுத்துப்
பதியப்படுவனவெல்லாம்
உதவியில்
சேராதவை.
Share:

நெஞ்சே எழு...

விழுவதும்
அழுவதுமாய்ப்
பழகிப்போன
மனதை
எழுவதற்குப்
பழக்குவோம்.!
Share:

தங்கை

தாய்மடி
தவழ்ந்தத்
தடங்களின்
நினைவுகளைத்
தங்கைக்கு
அவள்கூற
அனுபவத்
தாய்போல
அக்காவைத்
தாலாட்டிக்
கொண்டிருந்தாள்
அவள்.
#அக்காவும்_தங்கையும்
Share:

இளமையில் கல்

அறும்புகளின்
விரல்களால்
விளைந்த
கட்டடச்சுவர்கள்
வலி"கள்"
நிறைந்தவை.
Share:

அறிவாயுதம்

அன்பும் அறிவுமே ஆயுதம்.
பிறர்க்கு கொடுக்க கொடுக்க
கூர்பெறும்.
#ஆயுதபூசை
Share:

வறுமை

வறு"மை"
அழிக்கக்கூடியது.
Share:

ஆசிரியர்

குழந்தைகள்
கனவுப்பெட்டகங்கள்
அவர்களைச்
சிறகடிக்கவைப்பதும்
சிறையிலடைப்பதும்
இயக்குவோர் 
கைகளில் உள்ளது.
#வகுப்பறை
Share:

கலாம்

இக்காலம்
இழந்துவிட்ட
பொன்னிலம்..

எக்காலம்
ஆயினும்
அன்பை
அறிவை
அறிவியலை
அறுவடையாய்க்
கொடுத்திடும்
கொடைநிலம்...

இன்னும்
இருந்திருக்
#கலாம்.
Share:

நீ..நான்...காதல்..

நீலவான
நீளமெங்கும்
நீந்திச்செல்லும்
நினைவலையாய்
நீ.!
Share:

நினைவுகள்

பாழடைந்த
வீடுடொன்றின்
பலநூறு
நினைவுகளாய்ப்
படர்ந்திருந்தது
சிலந்திவலை.
Share:

வகுப்பறை

பூட்டப்பட்ட
வகுப்பறை சுவரருகில்
முட்செடியொன்று
முளைவிட்டிருந்தது.
Share:

தீபாவளி

மகனுக்கு 
வேட்டி சட்டை
மகளுக்கு
பாவாடை சட்டை
மனைவிக்கு
பட்டுப்புடவை
எனக்கு
ஒரு "பல்செட்" என
தீபாவளிக் கடமைய
முடிச்சாச்சு...
என்னாது..
பல்செட்டா...
பின்ன வீட்டம்மா
ஆசயா சுட்டுவச்ச
பலகாரத்தயெல்லாம்
திங்கவேணாமா...
Share:

நீ.. நான்..காதல்..

விரல்
நான்
தொடுதிரை
நீ
Share:

அச்சம் தவிர்

உச்சம் தொடவேண்டுமாயின்
அச்சம் விடுவேண்டும்.
Share:

தோழி

சிறப்பு வகுப்புனு சீக்கிரமே வந்துடுவோம் முன்னாடி வரிசையில மூனாவதா நீ இருப்ப கடைசி வரிசையில கையக்கட்டி நானிருப்பேன் வாயாடிப்பயலேனு வாத்தியாரு திட்டயில விழியெல்லாம் விரிஞ்சிருக்க பெருஞ்சிரிப்பு நீ சிரிப்ப உணவு வேளையில உன்னோடு நானிருக்க வயிறுமட்டுமின்றி மனசும் நெறஞ்சிருக்கும்.
#தோழி
Share:

Visited

FIND ME ON TWITTER

POSTS FROM FACEBOOK

Recent Posts