காளையார்கோவில்

காளையார்கோவில்

13-01-2014,திங்கட்கிழமை காலை 10.30 மணி
ஐந்து வருடங்களுக்குப் பிறகு அன்றுதான் எனது பாதம் அம்மண்ணை முத்தமிட்டது!
எனது பாதம் அம்மண்ணைத்தொட்டவுடன் எனக்குள் ஓர் இனம்புரியாத சந்தோசம்,பூரிப்பு,அளவற்ற மகிழ்ச்சி இன்னும் என்னன்னவோ.....
ஆம்! என்னை ஓர் ஆசிரியராக உருவாக்கிய ஊர் அல்லவா அது.
எனக்கு விபரம் தெரியவந்த பருவத்தில் உலகம் இதுதான் என உணரச் செய்த இடம். 

நான் எனது ஆசிரியர் பட்டயப் பயிற்சியை இங்குள்ள மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனத்தில் பயின்றிருக்காவிடில் என் வாழ்வின் பகுதி சந்தோசமான நாட்களை இழந்திருக்கக்கூடும்.அந்த அளவிற்கு
எனக்குள் ஓர் ஆனந்தத்தையும் அனுபவத்தையும் கொடுத்த ஊர்.
ஓர் சான்றிதழ் தேவைக்காக நான் அன்று அங்கு செல்ல நேர்ந்தது.

எனது நிறுவனத்தில் நான் பயின்ற வகுப்பறை,தங்கியிருந்த விடுதி,நண்பர்களுடன் வட்டமடித்த இடங்கள் இவையனைத்தும் பார்த்தபொழுது எனக்குள் ஓர் சோகம்,அத்தகைய தருணங்கள் மீண்டும் கிடைக்காதா என்ற ஏக்கம் ,விவரிக்க இயலாத அளவிற்கு மனதினுள் ஒரு தாக்கம்.சான்றிதழைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்ப நேர்கையில் தாயைவிட்டுப் பிரியும் சிறுபிள்ளைபோல் மனம் மௌனமாய் அழத்தொடங்கிற்று.............
காளையார்கோவில்-சிவகங்கை மாவட்டம்
--- கல்லைவெங்கட் என்கிற
சி.வெங்கடேசன்,
2007-2009
மாவட்டக் கல்விப் பயிற்சி நிறுவனம்,
காளையார்கோவில்.
Share:

No comments:

Post a Comment

Visited

FIND ME ON TWITTER

POSTS FROM FACEBOOK

Recent Posts