பயணம் புதிது..

பயணம் புதிது. .
  • பாராசூட் மூலம் முதன்முதலில் குதித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் கேப்டன் பெர்ரி. 1912 ஆம் ஆண்டு இவர் மத்திய அமெரிக்காவிலுள்ள மிஸ்சோரியிலிருக்கும் செயிண்ட் லூயிஸ் என்ற இடத்தில் விமானத்தில் பறந்தபோது வானிலிருந்து குதித்தார்.

  • இதே போல் பாராசூட் மூலம் முதன்முதலில் குதித்த பெண் என்ற பெருமையைப் பெற்றவர் ஜார்ஜியா பிராட்விக் என்பவர் ஆவார். இவர் 1913 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 21ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானத்திலிருந்து பாராசூட் மூலம்  குதித்தார். 
  • ராக்கெட்மூலம் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு லைக்கா என்ற பெண் நாய்.1957 அம் ஆண்டு அப்போதய சோவியத் யூனியன் அனுப்பிய ராக்கெட் மூலம் லைக்கா விண்வெளிக்குச் சென்றது.
  • அதன் பிறகு 1958 ஆம் ஆண்டு லாஸ்கா மற்றும் பென் ஜீ என்ற இரு எலிகளை அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்பியது.
  • 1961 ஆம் ஆண்டு அமெரிக்கா ஹாம் என்ற சிம்பன்சி  குரங்கை விண்வெளிக்கு அனுப்பியது.
  • 1963 ஆம் ஆண்டு ஃப்ரான்ஸ் பெலிட்டி என்ற பூனையை விண்வெளிக்கு அனுப்பியது.
படம்:img.nauticexpo.com.



Share:

No comments:

Post a Comment

Visited

FIND ME ON TWITTER

POSTS FROM FACEBOOK

Recent Posts