புளுடூத் - திறக்கற்றை

புளுடூத் - திறக்கற்றை

இன்று நாம் பயன்படுத்தும்  புளுடூத் (திறக்கற்றை)  எனும் தொழில்நுட்பமானது தரவுகளை (தகவல்கள்) பிற சாதனங்களுக்கிடையில் பகிர்ந்துகொள்ள உதவும்ஒரு தகவல் தொழில்நுட்பமாகும்.  இதில்
2.4 கிகா ஹெர்ட்ஸ்  ரேடியோவைப்பயன்படுத்தி 720 கிலோ பைட் வேகத்தில் சாதனங்களை  ரிமோட் மூலம் இயக்கும் ஒரு தொழில்நுட்பமாகும்.
ஒவ்வொரு சாதனங்களுக்கும் ஒரு தொழில்நுட்பமுகவரி கொடுக்கப்படும். அவற்றை இயக்குவதற்கான இரகசிய குறீகளின் உதவியால் இயக்கப்படவேண்டிய சாதனங்கள் எளிதில் இயக்கப்படும். இந்த தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டுபிடித்தது ஐரோப்பாவைச் சேர்ந்த எரிக்ஸன் எனும் நிறுவனமாகும்.

புளுடூத் எனும் பெயர் எப்படி வந்ததுதெரியுமா?

புளூடூத்  எனும் சொல்  செருமானிய மொழிச்சொல்லான "ப்ளாடோன்" (Blátönn) எனும் சொல்லிலிருந்து  உருவான ஆங்கில வடிவம். இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த டென்மார்க்கின் முதலாம் ஹரால்ட் மன்னன்
" சிங்க் ஹெசால்ட் ப்ளாடண்ட் " என்பவரின் சிறப்புப் பெயராகும். அதீத விருப்பத்தின்காரமாக அதிகஅளவிலான 
 புளூபெரீசு பழங்களை உண்ட  இம்மன்னனின் பற்களில் நீலக்கறை படிந்து நீலநிறமாக தோற்றமளித்தது. இதனால்  மக்கள்  இம்மன்னனை "புளு டூத்" என்று அழைக்கத் தொடங்கினர். இவர் வேறுபட்ட டானிஷ் பழங்குடியினரை ஒன்றிணைத்து, அங்கிருந்த பல குறுநிலங்களை எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து ஒரே பேரரசாகக் கட்டமைத்தாராம். 
புளூடூத் தொழில்நுட்பமும் அவரைப் போலவே தகவல்தொடர்புகளை  ஒரே தரநிலைக்குக் கொண்டு வரும் செயலைச் செய்கிறது. இதற்காகத்தான்  இப்பெயர் இந்த தொழில்நுட்பத்திற்கும் புளுடூத் எனும்  பெயர் வழங்கப்பட்டது.

புளுடூத் சின்னம் (லோகோ) எப்படி வந்ததுதெரியுமா?




ஜெர்மானிய எழுத்துகளான  (ஹகால்) (Hagall) மற்றும் (பெர்க்கனான்) (Berkanan) ஆகியவை இணைந்த  இணைப்பெழுத்துக்களின் சேர்க்கையே புளுடூத் சின்னம் ஆகும். இந்த குறீடுகளின் விளக்கம் படமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Visited

FIND ME ON TWITTER

POSTS FROM FACEBOOK

Recent Posts