மாலைமாற்று சொற்கள்

மாலைமாற்று சொற்கள்



இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் படித்தாலும் எழுதினாலும் ஒரே போல இருக்கும் சொற்கள் மாலைமாற்று அல்லது இருவழியொக்கும் சொற்கள்
 (Palindromes ) எனப்படும். 
சுருங்கக்கூறின்,
எழுத்துக்களை ஈறுமுதலாகப் படித்தாலும் பாட்டு மாறாத கவிவகை; இருவழியொக்கும் சொல்  மாலைமாற்று ஆகும்.
தமிழ் இலக்கியத்தில் ஓவியக் கவி (சித்திரக்கவி) மிறைக் கவி ஆகிய பிரிவுகளுள் மாலைமாற்றுஅடங்கும்.   
மாலைமாற்று மாலையின் நுனியை மாற்றிப் பிடிப்பதுபோல அமைந்திருக்கும். அதாவது, ஒரு பாடலின் முதல் வரியைத் தொடக்கத்திலிருந்து இறுதிவரை படித்துக்கொண்டே வந்து, பின்பு அதையே இறுதியிலிருந்து தொடக்கம் வரை மாற்றிப் படித்துவந்தால், அந்த அமைப்பு இரண்டாவது வரியில் இருப்பதைக் காணலாம். இதுவும் சித்திரக்கவி வகையைச் சேர்ந்தது. இவ்வாறு ஒரு மாலையின் நுனியும் இறுதியும் மாறி மாறி அமைந்திருப்பதால், இது "மாலைமாற்றுப் பதிகம்' எனப் பெயர் பெற்றது.
                                                                                                              ( நன்றி: தமிழ் விக்சனரி)
மாலைமாற்று என்பதற்கான ஆங்கிலச் சொல்லான Palindrome என்பது கிரேக்க வேர்ச் சொற்களிலிருந்து பெறப்பட்டு ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது.
மாலைமாற்று நிறைய மொழிகளில் இருக்கிறது. தமிழ்மொழியில், தமிழ் 
இலக்கியத்தில் மாலைமாற்று வடிவில் பதிகமே
 இருக்கிறது. திருஞானசம்பந்தர் பாடிய திருமாலைமாற்றுப் பதிகத்தில் காப்புச்
 செய்யுளும் சேர்த்து மொத்தம் 11 மாலைமாற்றுச் செய்யுள்கள் இருக்கின்றன. 

தமிழில் உள்ள சில மாலைமாற்று  சொற்கள் மற்றும் வாக்கியங்கள்
சிலவற்றை இங்கு பட்டியலிட்டுள்ளேன்.
  1. விகடகவி
  2. குடகு
  3. திகதி
  4. தேடாதே
  5. கைரேகை
  6.  விரவி  
  7. மாமா
  8. தாத்தா 
  9. பாப்பா
  10. தேரு வருதே
  11. மாடு சாடுமா
  12. மோரு தாருமோ
  13. மோரு வருமோ
  14. தோடு ஆடுதோ
  15.  மாலா போலாமா? 
  16. மோக ராகமோ? 
  17. மேளதாளமே 
  18. மாடு ஓடுமா? 
  19. போடா போ 
  20. வாசு வா?
  21. விதேச தேவி 
  22. வை பூவை
  23. கைதி வேதிகை
  24. யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
    காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா                            (திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களுள் ஒன்று)
  25. நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
    காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
Share:

No comments:

Post a Comment

Visited

FIND ME ON TWITTER

POSTS FROM FACEBOOK

Recent Posts